Enable Javscript for better performance
காங்கயம் அருகே கார்-பைக் மோதல்: கல்லூரி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    காங்கயம் அருகே காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
    கரூர் மாவட்டம், குளித்தலை அருகிலுள்ள மேல மைலாடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபெருமாள்  மகன் விநாயகப்பெருமாள் (21). கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது ஊரிலிருந்து மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை காலை, கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.
    காங்கயம்- கோவை நெடுஞ்சாலையில், காடையூர் புதூர் பிரிவுக்கு அருகே வந்தபோது, எதிரே கோவையிருந்து காங்கயம் சென்ற கார், மோட்டார் சைக்கிளுடன் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விநாயகப்பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஊதியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai