Enable Javscript for better performance
குடிநீர்க் குழாய் பதிப்பு பணி தாமதம்: ஏப். 9-இல் மார்க்சிஸ்ட் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர்க் குழாய் பதிப்பு பணி தாமதம்: ஏப். 9-இல் மார்க்சிஸ்ட் உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 31st March 2018 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர்க் குழாய் அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதைக் கண்டித்து, ஏப்.9, 10 -ஆகிய தேதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
    திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகி குமரன் காலனி கிளைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநகராட்சி 3-ஆவது வார்டு பகுதியில் பவானி குடிநீர்த் திட்ட குழாய் பதிக்கும் பணி 2013-இல் தொடங்கி ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தாமதமாக பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து  பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. 
    எனவே, பணிகளை விரைந்து முடித்து, குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். குண்டும், குழியுமாக மாறியுள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி முதல் கட்டமாக ஏப்.9 , 10 ஆகிய தேதிகளில் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்தில்  தியாகி குமரன் காலனி வடக்கு, தெற்கு, விஜயாபுரி கிளைச் செயலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai