Enable Javscript for better performance
குற்ற வழக்கில் விரைவான நடவடிக்கை: காவலர்களுக்கு வெகுமதி- Dinamani

சுடச்சுட

    

    குற்ற வழக்கில் விரைவான நடவடிக்கை: காவலர்களுக்கு வெகுமதி

    By DIN  |   Published on : 31st March 2018 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூரில் தொழிலதிபர் வீட்டில் 39 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7.8 லட்சம் பணம் திருடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபரை விரைவாக கைது செய்த தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
    திருப்பூர், அனுப்பர்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட ஜி.என்.நகர், தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் பின்னலாடை உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 21-ஆம் தேதி நள்ளிரவு அவரது வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 39 பவுன் தங்க நகைகள் மற்றும்  ரூ.7.8 லட்சம் பணத்தைத் திருடிச் சென்றார். அப்போது விழித்த அருண்குமாரின் மனைவியை  கீழே தள்ளி விட்டு மர்ம நபர் தப்பிச் சென்றார்.
    இச் சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பொ.நாகராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார் 8 மணி நேரத்துக்குள் திருட்டில் தொடர்புடைய ஜி.சிவா (40) என்பவரை கைது செய்து  பணம், நகையை மீட்டனர்.
    இவ் வழக்கில் தொடர்புடைய நபரை விரைவாக கைது செய்த தனிப்படை காவல் ஆய்வாளர் கே.டி.ராஜன்பாபு, உதவி ஆய்வாளர் ஆறுமுகம், தலைமைக் காவலர்கள் காளிமுத்து, ஜெயக்குமார், சங்கரநாராயணன் ஆகியோரை காவல் ஆணையர் பொ.நாகராஜன் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி அளித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai