Enable Javscript for better performance
தமிழைப் பயிற்று மொழியாக்கக் கோரி 80 வயது முதியவர் பேசா நோன்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழைப் பயிற்று மொழியாக்கக் கோரி 80 வயது முதியவர் பேசா நோன்பு

    By DIN  |   Published on : 31st March 2018 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூரில் 80 வயது முதியவர் ஒருவர் பேசா நோன்பு இருந்து வருகிறார்.
    திருப்பூர், கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இயற்கை ஆர்வலர் க.இரா.முத்துசாமி (80). இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். தமிழ் ஆர்வலரான இவர், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள்அனைத்திலும் மழலையர் வகுப்பு தொடங்கி தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும்.  உயர் கல்வியும் தமிழில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 24-ஆம் தேதி முதல் வீட்டில் பேசா நோன்பு இருந்து வருகிறார்.
    இவரது போராட்டத்துக்கு திருப்பூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai