Enable Javscript for better performance
தீ விபத்தில் பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெருமாநல்லூர் அருகே தீ விபத்தில்  இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
     திருப்பூர், பெருமாநல்லூர் எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்தவர்  ஜேம்ஸ் (25). இவரது மனைவி நளினி(19). இருவரும் அதே  பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி இரவு   நளினி மண்ணெண்ணெய் அடுப்பைப் பற்றவைத்தாராம். அப்போது, அவர் அணிந்திருந்த  உடையில் திடீரென தீ பிடித்தது. இதையறிந்த ஜேம்ஸ், நளினியைக் காப்பாற்ற முயன்றபோது,  அவர் சிறு  காயங்களுடன் தப்பினார். பலத்த காயமடைந்த நளினி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 
       இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவுந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai