Enable Javscript for better performance
பனியன் தொழிலாளர்கள் 5 சதவீதம் கூலி உயர்வு கேட்டுப் பெற வேண்டும்: எம்.எல்.எஃப். கூட்டத்தில் தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    பனியன் தொழிலாளர்கள் 5 சதவீதம் கூலி உயர்வு கேட்டுப் பெற வேண்டும்: எம்.எல்.எஃப். கூட்டத்தில் தீர்மானம்

    By DIN  |   Published on : 31st March 2018 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏப்ரல் மாதம் முதல் பனியன் தொழிலாளர்கள் 5 சதவீத கூலி உயர்வு கேட்டுப் பெற வேண்டும் என்று எம்.எல்.எஃப். அறிவுறுத்தி உள்ளது.
    பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் (எம்.எல்.எஃப்.) செயற்குழுக் கூட்டம் திருப்பூர், பிராசசர் வீதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் சிறப்புத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பனியன் சங்கச் செயலர் மனோகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பூர் மாநகர மதிமுக செயலர் சிவபாலன், பஞ்சாலை சங்கச் செயலர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
    பனியன் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமான 2016-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி அனைத்து பனியன் பிரிவில் வேலை செய்யும் சிப்ட் முறை தொழிலாளர்களுக்கு, தற்போது பெறும் அடிப்படை ஊதியத்தில் இருந்து 5 சதவீதம் உயர்வும், பீஸ் ரேட் முறை தொழிலாளர்களுக்கு தற்போது பெற்று வரும் ஊதியத்துடன் இந்த ஆண்டுக்கான 5 சதவீத ஊதிய உயர்வும், 
    இதரச் சலுகைகளான தேநீர் செலவு, திருமண உதவி, குடும்ப நல உதவி, காப்பீடு மற்றும் அடையாள அட்டைகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பணிபுரியும் நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கேட்டுப் பெற வேண்டும்.
     மே மாதம் முதல் தேதி தொழிலாளர் தினத்தன்று அனைத்துப் பகுதிகளிலும் எம்.எல்.எஃப். பனியன் சங்கம் சார்பில் கொடியேற்று விழா சிறப்பாக நடத்த வேண்டும். மத்திய அரசின் தவறான கொள்கையால் பனியன் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டியூட்டி டிராபேக் எனப்படும் ஊக்கத் தொகை குறைப்பாலும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பினாலும் தொழில் பாதிக்கப்பட்டு, அதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
    எனவே, மாநில அரசு உடனடியாக தலையிட்டு, தொழிலையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும். திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கான இடம் தேர்வாகியும், பணிகள் தொடங்காமல் இருப்பதைக் கண்டிப்பதுடன் விரைவில் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai