Enable Javscript for better performance
மாரியம்மன் கோயில் கொடியேற்று விழா- Dinamani

சுடச்சுட

    

    உடுமலை மாரியம்மன் கோயிலில் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா கடந்த 20ஆ ம் தேதி நோன்பு சாட் டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 27 ஆம் தேதி கம்பம் போ டுதல் நிகழ்ச்சி நடை பெற்றது. இதையடுத்து கொடியேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  அப்போது  வஸ்த்திர பூஜை, அஸ்திர பூஜைகள் செய்யப்பட்டன.   இதைத் தொடர்ந்து பக்தர்கள் பூ வோடு எடுக்கும் நிகழ்வு பிற்பகல் தொடங்கியது.
     ஏப்ரல் 4 ஆம் தேதி மா விளக்கும், திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி ஏப்ரல் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ். ஸ்ரீதர், செயல் அலுவலர் இரா.சங்கர சுந்தரேசுவரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai