Enable Javscript for better performance
முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 31st March 2018 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளக்கோவில் பகுதியிலுள்ள பல்வேறு கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை விமர்சையாக நடைபெற்றன.
     வெள்ளக்கோவில் அருகே மேட்டுப்பாளையம் கிராமம் புஷ்பகிரி வேலாயுத சுவாமி கோயில், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
     இதே போல், வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில், சோழீஸ்வரர் கோயில், மயில்ரங்கம் ஈஸ்வரன் கோயில், முத்தூர் செல்வக்குமார சுவாமி கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மூலவருக்கு கொடுமுடி காவிரி தீர்த்தம், திருமூர்த்தி மலை அருவித் தீர்த்தம் தரித்து வந்த பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு நீர் மோர், பானக்கம், அன்னதானம் வழங்கப்பட்டன. ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai