Enable Javscript for better performance
விலை குறைவால் முருங்கை விவசாயிகள் கவலை- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவில் பகுதியில் முருங்கைக் காய்களின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள்  கவலை அடைந்துள்ளனர்.
    வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரத்தில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மர முருங்கையும், அதற்கு அடுத்தபடியாக செடி முருங்கையும் உள்ளன. வெள்ளக்கோவில், வெள்ளமடை, புதுப்பை, முளையாம்பூண்டி தனியார் தாற்காலிகச் சந்தைகளில் முருங்கைக் காய்கள் வாங்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமை மர முருங்கைக் காய் கிலோ நான்கு ரூபாய்க்கும், செடி முருங்கைக் காய் ஐந்து ரூபாய்க்கும் விற்பனையானது.
      கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்து விலை குறைந்து வருவதால் முருங்கை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் கிலோ ரூ. 20-க்கு விற்றால்தான் கட்டுப்படியாகும் என, காடையூரான்வலசு விவசாயி கே.செந்தில் தெரிவித்தார்.  விலை மிகவும் குறைவாக இருப்பதால் பல விவசாயிகள் முருங்கைக் காய்களைப் பறிக்காமல் மரத்திலேயே விட்டு விடுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai