Enable Javscript for better performance
அலுவலகத்தின் பூட்டை உடைத்து திருடியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வீட்டுமனை விற்பனைப் பிரிவு அலுவலகத்தின் பூட்டை உடைத்து பணம்,  மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    அவிநாசி போலீஸார்,  புதிய பேருந்து நிலையம் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். 
    விசாரணையில் அவர்,  கரூர்,  சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பத்மநாபன்(53) என்பதும்,   இவர் அவிநாசியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டுமனை விற்பனைப் பிரிவு  அலுவலகத்தின் பூட்டை உடைத்து பணம்,  மடிக்கணினி உள்ளிட்டவற்றைச் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து  பத்மநாபனைக் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai