Enable Javscript for better performance
அவிநாசியில் 339 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடியில் நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசியில் 339 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடியில் நலத்திட்ட உதவிகள்

    By DIN  |   Published on : 18th May 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அவிநாசியில் 339 பயனாளிகளுக்கு ரூ. 1.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டப் பேரவை தலைவர் ப.தனபால் வியாழக்கிழமை வழங்கினார்.
    சமூக நலத்துறை,  மகளிர் திட்டம்,  வருவாய்த் துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற நடைபெற்ற இவ்விழாவுக்கு,  மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் பங்கேற்று பெண்களுக்கு இருசக்கர வாகனம்,  திருமண நிதியுதவி, திருமாங்கல்யத்துக்கு தங்கம்,  முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை என 339  பயனாளிகளுக்கு  ரூ.1.52  கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
    மேலும்,  துலுக்கமுத்தூர்,  பெரியகானூர் ஆகிய பகுதிகளில் தலா ரூ. 23.10 லட்சம் மதிப்பில்  கட்டப்பட்டிருந்த கால்நடை மருந்தக கட்டடம்,  குட்டகம் பகுதியில் புதிதாக துவங்கப்பட்ட கால்நடை மருந்தகம் ஆகியவற்றைத் திறந்துவைத்தார். 
    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி,  சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார்,  மாவட்ட சமூக நல அலுவலர்  பூங்கோதை,  வட்டாட்சியர் விவேகானந்தன்,  கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சேவூர் ஜி.வேலுச்சாமி,  சுப்பிரமணியம்,  அரசு அலுவலர்கள்,  உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai