Enable Javscript for better performance
கூட்டுறவுப் பணியாளர்கள் மே 21 முதல் காலவரையற்ற விடுப்பு போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவுப் பணியாளர்கள் மே 21 முதல் காலவரையற்ற விடுப்பு போராட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மே 21-ஆம் தேதிமுதல் காலவரையற்ற விடுப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். 
    இது குறித்து,  தமிழ்நாடு  மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் தெக்கலூர்  கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில்  வியாழக்கிழமை அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது: 
    கூட்டுறவு சங்க நிர்வாகம் முழுமையாக முடங்கி உள்ளது.  அதனால்,  விவசாயிகளுக்கு வேளாண் கடன்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கூட்டுறவு சங்கத்தில்  டெபாசிட் செய்துள்ள தொகைகளைத்  திரும்ப பெற இயலாமல் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். பணி நிறைவடைந்த பணியாளர்கள், தலைமை  பொறுப்பாளர்கள் இல்லாமல் பணி நிறைவு அனுமதிக்கப்படாமல் விடுவிப்பு செய்ய இயலவில்லை. ஏப்ரல் மாத ஊதியம்  பெற முடியாமல் பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம்  முழுவதும் மே 21-ஆம் தேதிமுதல் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் காலவரையற்ற விடுப்பு  எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். 
    திருப்பூர் மாவட்டத்தில் 192 கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள்  இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும்,  இதில் 892 ரேஷன் கடை ஊழியர்களும் கலந்து கொள்வார்கள். இந்தப் போராட்டதால் நமது மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 200 கோடிக்கும் மேல் பண பரிவர்த்தனை பாதிக்கப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
    இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் பி.பாலசுப்பிரமணியம், மாவட்ட இணைச் செயலாளர் பி.என்.சாமியப்பன், நிர்வாகிகள் உள்பட400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai