Enable Javscript for better performance
சாலை விபத்தில் விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார். 
    கரூர் மாவட்டம்,  அரவக்குறிச்சி மேற்கு கூடலூர் அருகிலுள்ள குருக்கல்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் பெரியசாமி (51). விவசாயி.  இவரது மகள் திருமணமாகி திருப்பூர், காங்கயம் சாலை, வள்ளியம்மை நகரில் வசித்து வருகிறார். பெரியசாமி தனது மகளைப் பார்ப்பதற்காக கூடலூரிலிருந்து புறப்பட்டு இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். 
    வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த சரக்கு வேன்,  பெரியசாமி வாகனத்தின் மீது மோதியது.  இதில் பலத்த  காயமடைந்த  பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
    இதுகுறித்து  சரக்கு வேன் ஓட்டுநரான நாகை மாவட்டம்,  மேல்காடு முரளிவெங்கட் (20) மீது,  வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai