Enable Javscript for better performance
சேவூரில் விவசாயிகள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை குறித்து, விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி சேவூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    அவிநாசி வட்டார வேளாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில்,  அவிநாசி வேளாண்மை உதவி இயக்குநர் அருள்வடிவு வரவேற்றார்.  திட்ட செயலாக்கம் மற்றும் திட்டத்தின் அனைத்து துறைகளின் பங்கு குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக  உதவியாளர் (வேளாண்மை) கே.அரசப்பன்,  மானாவாரி பயிர்களில் மேற்கொள்ளப்படும் உழவுத்  தொழில் நுட்பங்கள் குறித்து  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உழவியல் துறை பேராசிரியர் நடராஜன்,  வேளாண் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தும் திட்டம் குறித்து உதவி பொறியாளர் இ.சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர். 
    கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மானாவாரி சாகுபடிக்கேற்ற தீவனப் பயிர்கள் குறித்து கால்நடை உதவி மருத்துவர் பாலசுப்பிரமணியன்,   வனத்துறை சார்பில் செயல்படுத்தபடும் திட்டம் குறித்து வனச்சரகர் பிரேம்குமார்,  வேளாண்  விற்பனைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து வேளாண்மை அலுவலர் ரம்யாதேவி ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.  
    நிகழ்ச்சியை உதவி வேளாண்மை அலுவலர்கள் சின்னராஜ், பிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில்,  வடுகபாளையம் மானாவாரி கிராம விவசாய மேம்பாட்டுக் குழு பொறுப்பாளர்கள்,  விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai