Enable Javscript for better performance
பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் 658 விண்ணப்பங்கள் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் 658 விண்ணப்பங்கள் விநியோகம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்லடம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 658 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.  
    பல்லடம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.எஸ்சி கணிதம், பி.காம் , பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய 5 பாடப் பிரிவுகளுடன் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது. கல்லூரி துவக்கப்பட்ட முதலாம் ஆண்டில் 103 மாணவர்கள், 113 மாணவிகள் மொத்தம் 216 பேர் படித்து வருகின்றனர். 
    இக்கல்லூரியில் மொத்தம் 300 இடங்கள் உள்ளன. ஆனால் 658 விண்ணப்பங்கள் விநியோகிக்கபட்டு உள்ளது. 256 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களும், 402 பேர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பெற்று சென்றுள்ளனர். 
    இக்கல்லூரியில் பணியாற்றி வந்த முதல்வர் சித்ரா பதவி உயர்வு பெற்று உடுமலை அரசு கல்லூரிக்கு மாறுதலாகி சென்றுள்ளார்.  
    கோவை அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்வு கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த பி.பொன்முத்துராமலிங்கம் பல்லடம் அரசுக் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai