Enable Javscript for better performance
பின்னலாடை வர்த்தகத்தை மேம்படுத்த திருப்பூரில் 24-இல் ஃபேஷன் ஷோ- Dinamani

சுடச்சுட

    

    பின்னலாடை வர்த்தகத்தை மேம்படுத்த திருப்பூரில் 24-இல் ஃபேஷன் ஷோ

    By DIN  |   Published on : 18th May 2018 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்தை மேம்படுத்த திருப்பூரில் மே 24-ஆம் தேதி  ஃபேஷன் ஷோ நடைபெற உள்ளது.
    இதுகுறித்து திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மோகன சுந்தரம், கிருஷ்ணமூர்த்தி,  அண்ணாதுரை,  திருப்பூர் சர்வதேச ஃபேஷன் 2018 ஒருங்கிணைப்பாளர் மனோஜ் சரவணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: 
    திருப்பூர் பின்னலாடைத் துறையை  பொருத்தவரை மத்திய,  மாநில அரசுகளுக்கு சரியான புரிதல் இல்லை.  இதனால் இன்றைக்கு திருப்பூரில் உள்ள 10 லட்சம் தொழிலாளர்கள் தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் பலரும் தொழிலை விட்டு வெளியேறினால்போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
    இந்நிலையில்,  உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் முனைப்போடு,  திறன் வாய்ந்த இந்திய பின்னலாடைத் துறைக்கு ஏற்றாற்போல் வடிவமைப்புகளை உருவாக்கி அவர்கள் மூலம் தொழிலை மேம்படுத்த உள்ளோம். இதன் ஆரம்பக்கட்ட முயற்சியாக திருப்பூர் காயத்ரி உணவகத்தில் திருப்பூர் சர்வதேச  ஃபேஷன் 2018 எனும் பெயரில்  ஃபேஷன் ஷோ மே 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. 
    இதில், திருப்பூரின் முக்கிய ஏற்றுமதியாளர்களை அழைத்துள்ளோம். இதன் மூலம் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தி தற்போதைய அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai