Enable Javscript for better performance
பிளஸ் 2 பொதுத்தேர்வு: உடுமலை சீனிவாசா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 பொதுத்தேர்வு: உடுமலை சீனிவாசா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

    By DIN  |   Published on : 18th May 2018 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உடுமலை காந்தி நகர் சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    இப்பள்ளியில் படித்த 343 மாணவ, மாணவிகளில் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். 
    1180-க்கு மேல்  ஒருவரும், 1170-க்கு மேல் 4 பேரும், 1150-க்கு மேல் 11 பேரும், 1100-க்கு மேல் 58 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 8 பேரும், இயற்பியல் பாடத்தில் ஒருவரும், வேதியலில் 2 பேரும், வணிகக் கணிதத்தில் 6 பேரும்,  வணிகவியலில் 4 பேரும், கணக்குப் பதிவியலில் 14 பேரும் என மொத்தம் 35 பேர்  200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 
    சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை, பள்ளித் தாளாளர் விக்னேஷ் ஆர்.ரங்கநாதன்,  முதல்வர் ஜாஸ்மின் ஜேக்கப்,  மேலாளர் டி.ஜவஹர்,  மேல்நிலைப் பொறுப்பாளர் பி.சிவகுமார் மற்றும் பள்ளிக் குழு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai