Enable Javscript for better performance
லாரி மோதி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
    அனுமந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராமன் (60). கூலித் தொழிலாளி. இவர் வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    பிரதான சாலையிலிருந்து வேலகவுண்டன்பாளையம் பிரிவுக்குச் செல்ல வாகனத்தைத் திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார்.
    இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai