படைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செயல்விளக்க முகாம்

மக்காச்சோளப் பயிர்களை தாக்கும் படைப் புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்காச்சோளப் பயிர்களை தாக்கும் படைப் புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் உடுமலை வட்டம், ஜல்லிபட்டி கிராமத்தில் தங்கியுள்ளனர். மேலும் சுற்று வட்டார கிராமங்களுக்கும் சென்று களப் பணியாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உடுமலையை அடுத்துள்ள சின்னக்குமாரபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதில் மக்காச்சோளப் பயிர்களை தாக்கும் படைப் புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து களப் பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த புழுக்கள் வட அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குள் வந்தது என்பதும், எந்த செயற்கை பூச்சிக் கொள்ளிக்கும் இந்த புழுக்கள் கட்டுப்படாது என்பது குறித்தும் விவசாயிகளுக்கு அப்போது விளக்கிக் கூறப்பட்டது. இதனால் இந்த புழுக்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மண் கரைசலை பயிர்களின் குருத்தில் ஊற்ற வேண்டும் என வேளாண்துறையால் வழங்கப்பட்ட அறிவுரைகளை விவசாயிகளுக்கு மாணவர்கள் எடுத்துக் கூறினர். மேலும் செயல் விளக்கமும் அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com