அவிநாசியில் வீட்டுமனை வரன்முறைப்படுத்துதல் சிறப்பு முகாம்

அவிநாசியில் நடைபெற்ற வீட்டுமனை வரன்முறைப்படுத்துதல்  சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். 

அவிநாசியில் நடைபெற்ற வீட்டுமனை வரன்முறைப்படுத்துதல்  சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். 
அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள தமிழக அரசு நவம்பர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ( புதுப்பாளையம் மற்றும் கணியாம்பூண்டி தவிர )  29 ஊராட்சிகள், அவிநாசி பேரூராட்சி  ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அவிநாசி, சேவூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி ஆய்வு செய்து மனை வரன்முறை மேற்கொண்டதற்கான உத்தரவை வழங்கினார். 
இதில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  பாலசுப்பிரமணியன், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சி, சாந்தி லட்சுமி, வட்டாட்சியர் வாணி ஜெகந்தாம்பாள், அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com