நீராதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி திருப்பூரில் கொமதேக ஆர்ப்பாட்டம்

நீராதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி திருப்பூரில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீராதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி திருப்பூரில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலப் பொருளாளர் கே.கே.சி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநிலத் தலைமை நிலையச் செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன்,  மாவட்டச் செயலாளர்கள் வி.லோகநாதன் (வடக்கு), கங்கா சக்திவேல் (புறநகர்), கரைப்புதூர் ராஜேந்திரன் (மேற்கு),  சுப்பிரமணியம் (கிழக்கு), ரகுபதி ராகவன் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
இந்த ஆர்ப்பாட்டத்தில், அமராவதி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரைப் புதிய நீர்வழித்தடம் அமைத்து அப்பகுதியில் உள்ள உப்பாறு அணை, நல்லதங்காள் அணை, வட்டமலைக்கரை ஆகிய அணைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமூர்த்தி அணைக்கட்டுப் பகுதிகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும், விவசாயிகளும் பயன்படுத்தும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் திருமூர்த்தி நீர்பாசன வசதித் திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளக்கோவில், தசாவநாயக்கன்பட்டி அனைக்கட்டுக்கு மழைக் காலங்களில் தண்ணீர் வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
அவிநாசியில் உள்ள தாமரைக்குளம் நிரம்பி வெளியேறும் உபரி நீர் அருகில் உள்ள புதுப்பாளையம் குளத்துக்குச் செல்ல நீர் வழிப்பாதை அமைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும். 
அவிநாசி - அத்திக்கடவுத் திட்டம், ஆணைமலை - நல்லாறு திட்டம் உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நொய்யல் சாயக் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் ஆறு, நல்லாறு கெளசிகா நதி ஆகிய அணைகளில் உள்ள நீர்வழிப் பாதையைத் தூர்வாரி அப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் மின் அழுத்த கோபுரப் பாதை விவசாயிகளை பாதிக்காத வகையில், நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மனு அளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநகர நிர்வாகிகள் தம்பி வெங்கடாசலம், வேலுமணி, சுரேஷ்குமார், செல்வகுமார், ஆனந்தகுமார், மண்டல நிர்வாகிகள் வேலுசாமி, பொன்னுசாமி, விஜயசாரதி, கண்ணன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com