விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

காங்கயத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

காங்கயத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  விநாயகர் சதுர்த்தியை ஒட்டி  இந்து முன்னணி சார்பில் காங்கயம் நகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் இந்த சிலைகள் விசர்ஜன ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் காங்கயம் உடையார் காலனிக்கு வெள்ளிக்கிழமை மதியம் கொண்டு வரப்பட்டன. 
  அங்கு நடைபெற்ற ஊர்வல துவக்க நிகழ்வுக்கு, இந்து முன்னணி நகரத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாநில நிர்வாகக்குழு பொறுப்பாளர் குணா உள்ளிட்டோர் உரையாற்றினர். முத்தூர், ஆனூர் வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் அரவிந்த் நல்லதம்பி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.  உடையார் காலனியில் துவங்கிய ஊர்வலம்,  நகரின் முக்கிய சாலை வழியாக காங்கயம் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு வந்தது. அங்கு வழிபாடு நடைபெற்றதற்கு பின் விநாயகர் சிலைகள் அனைத்தும் வாகனத்தில் ஏற்றப்பட்டு திட்டுப்பாறை எல்.பி.பி வாய்க்காலில் கரைக்கப்பட்டன.

வெள்ளக்கோவிலில்...
வெள்ளக்கோவில், செப்.14:  வெள்ளக்கோவிலில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது 
விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் வெள்ளக்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 24 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. 
விசர்ஜனத்தையொட்டி, இந்த சிலைகள் தனித்தனி வாகனங்களில் வீரக்குமார சுவாமி கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. 
இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கிஷோர் குமார் தலைமை வகித்தார். புதுப்பை ஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் மு.பரிமளம் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். கொடுமுடி காவிரி ஆற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. இதில், பாஜக, இந்து முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com