உடுமலையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.


உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
இந்து முன்னணி:
இந்து முன்னணி சார்பில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 125க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த மூன்று நாள்களாக பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், அந்தச் சிலைகள் அனைத்தும் சனிக்கிழமை மாலை, உடுமலை நகரில் உள்ள நேதாஜி மைதானத்துக்கு வாகனங்களில் எடுத்து வரப்பட்டன.
பின்னர் அங்கு ஊர்வலத் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், நிர்வாகிகள் யுகேபிஎன்.கந்தசாமி, எம்.வீரப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து கச்சேரி வீதி, தளி சாலை, பழனி சாலை வழியாக சுமார் 15 கி.மீ. தூரமுள்ள மடத்துக்குளம் அமராவதி ஆற்றை ஊர்வலம் சென்றடைந்தது. பின்னர் அங்கு அனைத்து சிலைகளும் ஆற்றில் கரைக்கப்பட்டன.
இந்து மக்கள் கட்சி:
இந்து மக்கள் கட்சி சார்பில் உடுமலை மற்றும் குடிமங்கலம் வட்டத்தில் மொத்தம் 24 சிலைகள் வைக்கப்பட்டிரு ந்தன. இந்நிலையில், அனைத்து சிலைகளும் வெள்ளிக்கிழமை மாலை உடுமலை நகரில் உள்ள குட்டைத் திடலுக்கு வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. பின்னர் அவை ஊர்வலமாக, தளி சாலை, பழனி சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு மடத்துக்குளம், அமராவதி ஆற்றில்
கரைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com