முத்தூரில் ரூ. 2.14 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.14 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.முத்தூர், சிவகிரி, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 84 விவசாயிகள், 15,310 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை 6,062 கிலோ. காங்கயம், முத்தூரில் இருந்து 10 வணிகர்கள் அவற்றை வாங்க வந்திருந்தனர்.தேங்காய் கிலோ ரூ. 22.25 முதல் ரூ. 27.65 வரை ஏலம் போனது. இதன் விற்பனை மதிப்பு ரூ. 1.57 லட்சம் ஆகும். இதேபோல, 51 விவசாயிகள், 660 கிலோ கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். 6 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கிலோ ரூ. 60.85 முதல் ரூ. 93.45 வரை விற்பனையானது. இதன் விற்பனைத் தொகை ரூ.56 ஆயிரமாகும். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2.14 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.14 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.
முத்தூர், சிவகிரி, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 84 விவசாயிகள், 15,310 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை 6,062 கிலோ. காங்கயம், முத்தூரில் இருந்து 10 வணிகர்கள் அவற்றை வாங்க வந்திருந்தனர்.
தேங்காய் கிலோ ரூ. 22.25 முதல் ரூ. 27.65 வரை ஏலம் போனது. இதன் விற்பனை மதிப்பு ரூ. 1.57 லட்சம் ஆகும். இதேபோல, 51 விவசாயிகள், 660 கிலோ கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். 6 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கிலோ ரூ. 60.85 முதல் ரூ. 93.45 வரை விற்பனையானது. இதன் விற்பனைத் தொகை ரூ.56 ஆயிரமாகும். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2.14 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com