மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தொழிலாளியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு திமுக சார்பில் நிதி உதவி

தொழிலாளியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காங்கயம் ஒன்றிய திமுக சார்பில் ரூ. 20ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:51 am IST

தொழிலாளியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காங்கயம் ஒன்றிய திமுக சார்பில் ரூ. 20ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
காங்கயம் அருகே துண்டுக்காடு ஜெ நகரில் வசிப்பவர் பிரகாஷ் (40), பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜானகி (35). இவர்களது மகன் யஷ்விந்த் (7). 
இந்நிலையில், பிரகாஷுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. மாற்றுச் சிறுநீரகம் பெருத்தினால்தான் அவர் உயிர் வாழமுடியும் என்ற நிலையில் பிரகாஷுக்கு அவரது சகோதரி  தனது சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுக்க முன்வந்துள்ளார். ஆனால்,  மாற்றுச் சிறுநீரகம் பொருத்த  ரூ. 8 லட்சம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
இதனையறிந்த காங்கயம் வேர்கள் அமைப்பினர் பிரகாஷுக்கு உதவ முன்வந்து நிதி திரட்டி வருகின்றனர்.  இந்நிலையில், காங்கயம் வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் என்.எஸ்.சிதம்பரம், பிரகாஷ் இல்லத்திற்குச் சென்று ரூ. 20 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். வேர்கள் அமைப்பின் பொறுப்பாளர் வி.சங்கரகோபால், சிவன்மலை வேலுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.