அவிநாசியில் முகவரி தெரியாமல் தவித்த சிறுமி மீட்பு

அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் முகவரி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் முகவரி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கூறியதாவது:
 அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியில்  திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்தோம். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பெண் ஒருவர் சிறுமியுடன் நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து விசாரித்ததில், சிறுமியின் பெயர் ஜீவிதா (6) எனவும், சிறுமிக்கு அந்த பெண் பெரியம்மா எனக் கூறினார்.  இருப்பினும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதுபோல் காணப்பட்டார். இதையடுத்து, அவருடன் சிறுமியை அனுப்பாமல், தாயை அழைத்து வருமாறு அனுப்பி வைத்தோம். ஆனால், அப் பெண் திரும்பவில்லை. பிறகு சிறுமியின் வீட்டை அடையாளம் காண முயற்சித்தோம். ஆனால், வீட்டை கண்டறிய முடியவில்லை. 
இதையடுத்து, சிறுமி ஜீவிதாவை திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல அழகில் (சைல்டுலைன் அமைப்பு) ஒப்படைத்து காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் 
தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com