அவிநாசியில் ரூ.70.41லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசியில் ரூ.70.41லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் புதன்கிழமை நடைபெற்றது.

அவிநாசியில் ரூ.70.41லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் புதன்கிழமை நடைபெற்றது.
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு  4226 மூட்டைகள் வந்திருந்தன. 
இதில், ஆர்.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5,500 முதல் ரூ. 6,250வரையிலும், டி.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6, 000 முதல் ரூ. 6,750 வரையிலும், மட்ட ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 முதல் ரூ. 3,500வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.70.41 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com