வாக்குச் சாவடிகளில் கேமராக்கள் இயக்குபவர்களுக்குப் பயிற்சி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் கேமராக்கள் இயக்குபவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் கேமராக்கள் இயக்குபவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. 
திருப்பூர் மாவட்டத்தில் 275 வாக்குச் சாவடி மையங்களில் உள்ள 885 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இதில், வாக்குப் பதிவு நாளில் நடைபெறும் நிகழ்வுகளை இணையம் வழியாக கண்காணிக்கும் வகையில் இந்த வாக்குச் சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்தக் கேமராக்களை இயக்குபவர்கள் மற்றும் கண்காணிக்கும் நபர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார். 
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) மீனாட்சிசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கீதா பிரியா, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com