தேர்தல் பறக்கும் படையினரின் கெடுபிடி: பழையகோட்டை மாட்டுச் சந்தையில் 4 மாடுகள் மட்டுமே விற்பனை

தேர்தல் பறக்கும் படையினரின் கெடுபிடியால் வெள்ளகோவில் அருகே பழையகோட்டை மாட்டுச் சந்தையில் 4 மாடுகள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

தேர்தல் பறக்கும் படையினரின் கெடுபிடியால் வெள்ளகோவில் அருகே பழையகோட்டை மாட்டுச் சந்தையில் 4 மாடுகள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.
காங்கயம் அருகே ஈரோடு சாலையில் உள்ள நத்தக்காடையூர்-பழையகோட்டையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காங்கேயம் மாடுகளுக்கான பிரத்யேக சந்தை நடைபெற்று வருகின்றன. இங்கு காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
இந்த சந்தைக்கு ஈரோடு, அரச்சலூர், காங்கயம், சென்னிமலை, வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாரம்தோறும் சுமார் 200 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அப்போது, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை ஆகும்.
இந்நிலையில், காங்கயம் அருகே கரூர் சாலையில் உள்ள கண்ணபுரத்தில் தற்போது மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பெரிய அளவிலான மாட்டுச் சந்தை கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. மேலும், தேர்தலையொட்டி பறக்கும் படையினரின் கெடுபிடியால் மாடு வாங்கும், விற்கும் விவசாயிகள் ஆவணங்கள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாததால், சந்தையில் மாடுகளை விற்பனைக்குக் கொண்டு வரமுடியாத சூழல் உள்ளதாகத் தெரிகிறது.
இதன் காரணமாக பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் 12 மாடுகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 4 மாடுகள் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது. அதிகபட்சமாக காங்கேயம் இன பசு ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனையானது.
அடுத்து வரும் வாரங்களில் இந்த சந்தைக்கு அதிக மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com