சுடச்சுட

  

  அனைத்து தொழிலாளர்களுக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை

  By DIN  |   Published on : 16th April 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 18 ஆம் தேதி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிற் துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
  இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
  மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், தமிழக சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தல் நாளில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள், இதர வகை தொழிலாளர்கள் என அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் அன்றைய தினத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai