Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 16th April 2019 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உடுமலையை அடுத்துள்ள சோமவாரபட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
    இந்த பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் கல்விச் சீர் வழங்கும் விழா கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதையொட்டி மாணவர் சேர்க்கை குறித்த விழிப்பணர்வு முகாம் நடைபெற்றது.
    இதையொட்டி முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நடுநிலைப் பள்ளியான இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடிந்து செல்லும் மாணவர்கள் பெற்றோர்களுக்குப் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. நிறைவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கி.கோப்பெருந்தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai