சுடச்சுட

  

  திருப்பூர் ரயில் நிலையத்துக்கு சிறந்த பராமரிப்பு விருது

  By DIN  |   Published on : 16th April 2019 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட  பெரிய ரயில் நிலையங்களில் திருப்பூர் ரயில் நிலையத்துக்கும், சிறிய ரயில் நிலையங்களில் கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்துக்கும் சிறந்த பராமரிப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
  சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், 64 ஆவது ரயில்வே வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில் சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களுக்கு 14 விருதுகள் வழங்கப்பட்டன.
  சேலம் ரயில்வே கோட்டத்தில், சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வரும் பெரிய ரயில்வே நிலையங்களில் திருப்பூர் ரயில் நிலையத்துக்கு சிறந்த பராமரிப்பு விருது வழங்கப்பட்டது.
  அதேபோல, சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் சிறிய ரயில் நிலையங்களில் குளித்தலை ரயில் நிலையம் விருதைப் பெற்றுள்ளது.  இதில் திருப்பூர் ரயில் நிலைய மேலாளர் சுனில் தத்,  குளித்தலை ரயில் நிலைய மேலாளர் நாயக் ஆகியோர் கோட்ட மேலாளர் யு. சுப்பாராவிடம் இருந்து விருதுகளைப் பெற்றனர். இத்துடன் சிறந்த சேவை புரிந்த ஊழியர்கள் 400 பேருக்கும்,  11 அலுவலர்களுக்கும் விருது,  பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.
  இதில் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் பேசுகையில்,  "தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் சேலம் ரயில்வே கோட்டம் சிறந்த ஒட்டுமொத்த விருதைப் பெற்று சிறப்புச் சேர்த்துள்ளது.  இதற்கு அனைத்துப் பிரிவுகளில் பணிபிரியும் ஊழியர்கள், அலுவலர்களின் பங்களிப்பே காரணமாகும்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai