சுடச்சுட

  

  புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் அதிமுக அரசு அக்கறை: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

  By DIN  |   Published on : 16th April 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதிய திட்டங்களை உருவாக்கி அதனை செயல்படுத்துவதில் அதிமுக அரசு அக்கறை செலுத்தி வருவதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
  பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து உடுமலை நகர் 3 வது வார்டுக்கு உள்பட்ட ஏரிப்பாளையம் பகுதியில் பொதுமக்களிடையே திங்கள்கிழமை வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது:
  உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளன. இதில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றி அமைக்கும் திட்டம் ரூ.48 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  புக்குளம் கிராமத்தில் ரூ.30 கோடியில் ஏழை, எளியோரு க்கு 320 வீடுகள் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. உடுமலை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் நடைபெறும் வகையில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் மூன்றாம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.   புதிய திட்டங்களை உருவாக்குவதிலும் அதை நிறைவேற்றுவதில் அதிமுக அரசு அக்கறை செலுத்தி வருகிறது. நலத் திட்டங்கள் பொதுமக்களை நல்ல முறையில் சென்று அடைந்து வருவதால் அதிமுகவின் வாக்கு வங்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai