சுடச்சுட

  

  மக்களைத் தேர்தலையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் ஏப்ரல் 16 முதல் 18 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
  இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
  மக்களவைத்  தேர்தலையொட்டி  ஏப்ரல் 16, 17, 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த  மதுபானக்கூடங்கள்,  மனமகிழ் மன்றங்கள்,   உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற  மதுபானக்கூடங்கள் ஆகியவைகள் முழு நேரமும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது. தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai