சுடச்சுட

  

  வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே அரிய வகை தேவாங்கை பொதுமக்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
  எடைக்கல்பாடி கிராமத்தில் மிகச்சிறிய குரங்கு போன்ற ஒரு விலங்கு நடமாடுவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அதைப் பிடித்து கூண்டில் அடைத்து வைத்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
  இதையடுத்து, காங்கயம் வனச் சரக ஆய்வாளர் சுரேஷ் உத்தரவின் பேரில், வனக் காவலர் ஜெகநாதன் சம்பவ இடத்துக்குச் சென்றார். 
  பின்னர், பிடிபட்ட விலங்கு தேவாங்கு எனத் தெரியவந்தது. இது அழிந்து வரும் அரிய வகை உயிரினப் பட்டியலில் உள்ளதாக தெரிவித்தார்.
  கடும் வறட்சி காரணமாக காட்டுப் பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிக்கு தண்ணீர், உணவு தேடி வந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட தேவாங்கு ஊதியூர் வனப் பகுதியில் வனத் துறையினர் விடுவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai