சுடச்சுட

  

  காங்கயத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் பிரசாரம்

  By DIN  |   Published on : 17th April 2019 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கேட்டு புரட்சிகர இளைஞர் முன்னணியினர் காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.
  காங்கயம் நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தப் பிரசாரக் கூட்டத்துக்கு அமைப்பின் காங்கயம் பொறுப்பாளர் ப.கண்ணுசாமி தலைமை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள்:
  தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தேர்தல் தொடர்பாக எங்களது அமைப்பின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க துண்டறிக்கை விநியோகிக்கவும், தெருமுனைப் பிரசாரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 
  பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே பிரசாரத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் ஜனநாயகம் வளர திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai