சுடச்சுட

  

  பூளவாடி நூலகத்தில் ஏப்ரல் 21 முதல் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்

  By DIN  |   Published on : 17th April 2019 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உடுமலை வட்டம் பூளவாடி முழு நேர கிளை நூலகத்தில் கோடை விடுமுறையை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
  இதையொட்டி, பெண்களுக்கான பல்லாங்குழி, தாயம் விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன. மேலும், இருபாலாருக்குமான சதுரங்கப் போட்டிகள் ஏப்ரல் 22 ஆம் தேதி யும், கேரம் போட்டிகள் ஏப்ரல் 23 ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
  ஏப்ரல் 24 முதல் 30 ஆம் தேதி வரை தனித் திறன்களுக்கானப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லல், ஓவியம், கையெழுத்துப் போட்டி (தமிழ், ஆங்கிலம்), இசை நாற்காலி ஆகியப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும்.
  மேலும்,  போட்டிகளில் பங்கேற்க விரும்பமுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பதிவு செய்ய நூலகத்தை அனுகலாம். தொடர்பு எண்-8807696101.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai