சுடச்சுட

  

  வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை: கே.பாலகிருஷ்ணன்

  By DIN  |   Published on : 17th April 2019 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 
  இது குறித்து அவிநாசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  தற்போது, தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ஜனநாயகப் படுகொலை. திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் பணம் இருந்ததாகக் கூறப்பட்டது. அந்தப் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதா அல்லது வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வந்த பணம்தான் என்பதற்கான ஆதாரம் உள்ளதா?
  பாஜக, அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வியடையப் போகிறது என்பதை உணர்ந்தே இதுபோல அவதூறு பரப்பி மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என எதிர்பார்க்கின்றனர்.
  இது மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 தொகுதிகளிலும் ஆளும்கட்சியினர் கோடிக் கணக்கில் பணம் விநியோகிக்கின்றனர். பல இடங்களில் பணம் விநியோகம் செய்யப்படுவதாக நாங்கள் புகார் அளித்தபோதும் தேர்தல் ஆணையமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் உதயகுமார் சொந்தமான விடுதியில் உள்ள அவரது அறையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவிட்டு விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.
  ஆனால், அங்கேயும் பணம் பறிமுதல் செய்ததாகவோ நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை. பாஜக, அதிமுகவுடன் தேர்தல் ஆணையம் கைகோத்துச் செயல்படுகிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai