உடுமலை மாரியம்மன் கோயிலில் கம்பம் போடுதல் நிகழ்ச்சி

உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி கம்பம் போடுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி கம்பம் போடுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழா நிகழ்ச்சிகள் நோன்பு சாட்டுதலுடன் ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கியது. ஆண்டுதோறும் நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சிக்கு பிறகு கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
இதன் பிறகு கொடியேற்ற நிகழ்ச்சிகளும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் துவங்குவது வழக்கம். இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சியான கம்பம் போடுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் வளாகத்தில் நடப்பட்டது. கம்பம் போடுதல் நிகழ்ச்சியில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கம்பம் நட்டு வைக்கப்பட்ட பிறகு மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரைக் கம்பத்தில் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர். குறிப்பாக தேர்த் திருவிழா முடியும் வரை பெண்கள் அதிகாலை நேரத்தில் தண்ணீர் குடத்தை ஏந்திச் சென்று கம்பத்தில் மஞ்சள் நீரை ஊற்றி வழிபடுவார்கள்.
இந்நிலையில், ஏப்ரல் 18 ஆம் தேதி வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நிகழ்ச்சியும், 19 ஆம் தேதி கொடியேற்றமும் நடைபெறுகிறது. இதன் பின்னர் ஏப்ரல் 24 ஆம் தேதி மாவிளக்கு மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஏப்ரல் 25 ஆம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டமும், ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு குட்டைத் திடலில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் இரா.சந்திரமதி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com