மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிக்கு அனுப்பும் பணி நிறைவு: மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆய்வு

திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட

திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைக்கு உள்பட்ட வாக்குசாவடி மையங்களுக்கு நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பணியை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது அவர் கூறியதாவது: 
திருப்பூர் மக்களவைத்தொகுதிக்கு உள்பட்ட 667 வாக்குச்சாவடி மையங்களில் 1,704 வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட், எழுதுபொருள், படிவங்கள், சாக்குப் பைகள் உள்ளிட்ட பொருள்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்களை  வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக ஒரு மண்டலத்துக்கு ஒரு வாகனம் என 148 மண்டலத்திற்கு 148 வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 
இந்த வாகனத்தில் ஒரு மண்டல அலுவலர்,  மண்டல உதவி அலுவலர்,  ஒரு மண்டல அலுவலக உதவியாளர் என 3 நபர்களும் பாதுகாப்புக்காக காவலர்களும் உடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  இந்த 148 வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார். 
இதைத் தொடர்ந்து, திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நல்லூரிலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், கோட்டாட்சியர் செண்பகவள்ளி, திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெயகுமார், தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ், காவல் துறையினர்,  மண்டல அலுவலர்கள், அரசு அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com