வெள்ளக்கோவிலில் 55 டன் முருங்கைக்காய் வரத்து
By DIN | Published On : 22nd April 2019 07:57 AM | Last Updated : 22nd April 2019 07:57 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 55 டன் முருங்கைக்காய் வரத்துக் காணப்பட்டது.
வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் முத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய்கள் வாங்கப்படுகின்றன. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் முருங்கைக்காய்களை இங்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
இந்த வாரம் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளால் 55 டன் முருங்கைக்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.
மர முருங்கைக்காய் கிலோ ரூ. 7, செடி முருங்கைக்காய் கிலோ ரூ. 10க்கு வியாபாரிகள் வாங்கினர். கடந்த வாரம் மர முருங்கைக்காய் ரூ. 10, செடி முருங்கைக்காய் ரூ. 15க்கு வாங்கப்பட்ட நிலையில் இந்த வாரம் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளதாகத் தெரிகிறது.