முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
ஆகஸ்ட் 6இல் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
By DIN | Published On : 04th August 2019 11:15 AM | Last Updated : 04th August 2019 11:15 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதில், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்காக குண்டடம், தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறன் கொண்டவர்கள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.