Enable Javscript for better performance
குடிநீர்க் கட்டண உயர்வை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர்க் கட்டண உயர்வை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம்

    By DIN  |   Published on : 05th August 2019 10:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர்க் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் காங்கயம் நகராட்சியில் மனு கொடுக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
    காங்கயம் நகராட்சியில் மாதம் ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த குடிநீர்க் கட்டணத்தை ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை காங்கயம் நகராட்சியில் மனு அளிக்க உள்ளனர்.
    இந்தப் போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் காங்கயம் நகரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கயம் தாலுகா செயலாளர் திருவேங்கடசாமி கூறியதாவது:
    உயர்த்தப்பட்ட குடிநீர்க் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனு கொடுக்க உள்ளோம். ஒன்றிரண்டு பேர் மனு கொடுத்தால் அது சாதாரண நிகழ்வுதான். காங்கயம் நகராட்சிப் பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் வந்து தனித் தனியாக மனு கொடுக்க உள்ளோம். ஆகவே, மனு கொடுக்கும் போராட்டம் என அறிவித்துள்ளோம். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai