காங்கயத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்: 38 பேர் மீது வழக்குப் பதிவு

காங்கயத்தில் இரு தரப்பினருக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 38 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காங்கயத்தில் இரு தரப்பினருக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 38 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, காங்கயம் அருகே மேலப்பாளையத்தில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செல்ல இருந்த கொங்கு மக்கள் முன்னணி தலைவர் சி.ஆறுமுகம் தலைமையிலான ஆதரவாளர்களுக்கும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த தனியரசு எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களுக்கும் இடையே காங்கயம்-முத்தூர் சாலைப் பிரிவு அருகே மோதல் நடைபெற்றது.
இந்த மோதலில் கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகளின் 7 கார்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் காங்கயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கொங்கு மக்கள் முன்னணியின் சேலம் மாவட்டச் செயலாளர் சரண்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கரூர் மாவட்டச் செயலாளர் அருள் மற்றும் அடையாளம் தெரியாத 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் கரூர் மாவட்டச் செயலாளர் அருள் கொடுத்த புகாரின் பேரில், கொங்கு மக்கள் முன்னணி தலைவர் சி.ஆறுமுகம் 
மற்றும் அடையாளம் தெரியாத 7 பேர் உள்பட 8 பேர் மீது காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com