பொதுமக்களுடன் இணைந்து சங்கமாங்குளத்தை சீரமைக்க முடிவு

அவிநாசியில் பொதுமக்களுடன் இணைந்து சங்கமாங்குளத்தில் உள்ள சீமைக் கருவேலமரங்களை அகற்றி

அவிநாசியில் பொதுமக்களுடன் இணைந்து சங்கமாங்குளத்தில் உள்ள சீமைக் கருவேலமரங்களை அகற்றி மரங்களை நட்டு பராமரிப்பது என சமூக அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
அவிநாசி குளம் காக்கும் இயக்கம் சார்பில் சங்கமாங்குளம் பாராமரிப்பு குறித்த  பொதுமக்களுடனான ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள்:
அவிநாசியின் நீராதாரக் குளங்களில் ஒன்றான சங்கமாங்குளத்தை பொதுமக்களுடன் இணைந்து அங்குள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது, நீர்வழிப் பாதைகளை தூர்வாருவது, குளத்தில் மரங்களை நட்டு பராமரிப்பது எனவும், இந்தப் பணியை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் துவங்குவது, வருங்கால தலைமுறையினரான குழந்தைகளுக்கு இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவம் வகையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அவிநாசியில் குழந்தைகளுக்கான மாராத்தான் போட்டி நடத்தி பரிசளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இதில் பங்கேற்க விரும்புவோர் 9894273330, 9894172776 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com