"பல்லடத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்'
By DIN | Published On : 06th August 2019 09:17 AM | Last Updated : 06th August 2019 09:17 AM | அ+அ அ- |

பல்லடத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாத் வலியுறுத்திள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாத் பல்லடம் கிளைக் கூட்டம் அண்ணா நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை வகித்தார். பல்லடம் கிளைத் தலைவர் காஜாபாய் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பல்லடம் நகரில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். அண்ணா நகரில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். மாணிக்காபுரம் ஊராட்சியில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.