பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி
By DIN | Published On : 09th August 2019 09:32 AM | Last Updated : 09th August 2019 09:32 AM | அ+அ அ- |

திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி கல்வித் துறை சார்பில் திருப்பூர் தெற்கு குறுமைய அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி பல்லடம் சாலையில் உள்ள காந்தி வித்யாலயம் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 11, 14, 17, 19 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாகப் போட்டி நடைபெற்றது.
இதில், 11 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் ஹரிவிக்னேஷ் முதலிடத்தையும், ஸ்ரீயாஸ் இரண்டாவது இடத்தையும், சாய்சிவேஷ், அபினேஷ் ஆகிய இருவரும் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 11 வயதுக்கு உள்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் சில்வியா ஜெஸ்ஸி முதலிடத்தையும், ஷர்மிளா இரண்டாவது இடத்தையும், மைதிலி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
மற்றொரு பிரிவான 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் கிஷோர் முதலிடத்தையும், சந்தீஷ் இரண்டாவது இடத்தையும், முகமது அப்சல் முன்றாவது இடத்தையும் பிடித்தனர். மாணவிகளுக்கான இப்பிரிவில் நிறைமதி முதலிடத்தையும், விகாசினி இரண்டாவது இடத்தையும், இந்துலேகா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
மேலும் 17 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் நாகதிலக் முதலிடத்தையும், ஆதீஷ்விக்ரம் இரண்டாவது இடத்தையும், லோகதீப் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மாணவிகளுக்கான இப்பிரிவில் ஜெய்ஸ்ரீ முதலிடத்தையும், வைஷ்ணவி இரண்டாவது இடத்தையும், லோஹிதா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் சூர்யா முதலிடத்தையும், சுதன் இரண்டாவது இடத்தையும், லோகேஷ், குகன் ஆகிய இருவரும் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.