சுடச்சுட

  

  அவிநாசி பேரூராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
   அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட சேவூர்,  கோவை சாலை, தினசரி சந்தை, மேற்கு ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகத்தினர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, துணிக் கடை, உணவகங்கள், தேநீரகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள்  பறிமுதல் செய்யப்பட்டன. 
  இதில் பிளாஸ்டிக்  பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் வரை என மொத்தம் ரூ. 17ஆயிரம் அபராதம் விதித்திக்கப்பட்டது. மேலும் பயன்படுத்தினால்  ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai