சுடச்சுட

  

  காங்கயம் அரசுக் கல்லூரியில் 16இல் இறுதி கட்ட கலந்தாய்வு

  By DIN  |   Published on : 15th August 2019 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கயம் அருகே முள்ளிப்புரத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெறவுள்ளது.
  காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2019-20ஆம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை பாடப் பிரிவில் சேர்ந்து பயில்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இறுதி கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 
  கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்கள், ஆதார் கார்டு, ஜாதிச் சான்றிதழ், 2 புகைப்படம், அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் இரண்டு நகல்களோடு பெற்றோர்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என, கல்லூரி முதல்வர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai