சுடச்சுட

  

  சம்பா சாகுபடிக்கு மானிய விலையில் நெல் விதைகள் விநியோகம்

  By DIN  |   Published on : 15th August 2019 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கயம் வட்டாரத்தில் மானிய விலையில் நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக காங்கயம் வட்டார வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.
   இது குறித்து காங்கயம் வேளாண்மை உதவி இயக்குநர் தா.புனிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
  காங்கயம் வட்டாரத்தில் இயல்பான நெல் சாகுபடி பரப்பு 2,500 ஏக்கர். சம்பா நெல் சாகுபடி விவசாயிகள் கீழ்பவானி நீரை எதிர்பார்த்த நிலையில், வரும் 16-ஆம் தேதி முதல் டிச.11 ஆம் தேதி வரை நீர் திறந்துவிடப்படவுள்ளது.
    காங்கயம் வட்டார விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் பாய் நாற்றாங்கால் முறையிலும், ஒற்றை நாற்று நடவு முறையையும் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.
   சம்பா சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகளில் மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரி ரக ஆதார விதை 1,519 கிலோவும், பிபிடி 5204 ரக சான்று விதை 3,045 கிலோவும், ஐ.ஆர். 20 ரக சான்று விதை 4,992 கிலோவும், கோ.ஆர். 51 ரக ஆதார விதை 1,315 கிலோவும் என மொத்தம் 10,871 கிலோ விதைகள் நத்தக்காடையூரில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் உள்ளது.
   தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்: நெல் திட்டத்தில் இப்பகுதியில் விவசாயிகள் மிகவும் விரும்பும் ரகமான ஐ.ஆர். 20 ரக விதையும், பிபிடி 5204 ரக விதையும் ரூ.10 மானியத்திலும், மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரி, கோ.ஆர். 51 ரக விதை ரூ.20 மானியத்திலும் வழங்கப்படுகின்றன. மேலும் மண்வள பாதுகாப்புக்கு நுண்ணூட்டக் கலவைகள், உயிர் உரங்களும் இத்திட்டத்தில் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
   இயந்திர நடவு செய்ய காங்கயம் வட்டாரத்துக்கு 15 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் திறக்கப்படும் நீரினை திறம்படப் பயன்படுத்தி அதிக பரப்பளவில் சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொண்டு பயன்பெறவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai